Enable Javscript for better performance
6 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களை நல வாரியத்தில் சேர்க்கத் திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    6 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களை நல வாரியத்தில் சேர்க்கத் திட்டம்

    By பெங்களூரு,  |   Published on : 09th November 2013 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் 6 லட்சம் தொழிலாளர்களைச் சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, அந்த மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பரமேஸ்வர் நாயக் தெரிவித்தார்.

    இதுகுறித்து பெங்களூருவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

    கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் கட்டுமானத் தொழிலாளர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கும் பதிவு முகாமை அண்மையில் பெல்லாரியில் தொடங்கினோம். இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கை நடத்தப்படும்.

    இதன்மூலம், 6 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளோம்.  தற்போதைய நிலவரப்படி 3.2 லட்சம் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனர்.

    நல வாரியத்தில் பதிவு செய்ய தொழிலாளர்களை ஒப்பந்ததாரர்கள் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததால், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திற்கே சென்று, உறுப்பினர்கள் சேர்க்கை நடத்தப்படுகிறது.

    கட்டுமானத் தொழிலாளர்களின் நல வாழ்வுக்காக, மேல் வரியாக சேகரிக்கப்பட்டுள்ள ரூ. 2,066 கோடியை வேறு பணிகளுக்குப் பயன்படுத்தமாட்டோம். தொழிலாளர்கள்   குழந்தைகளின் திருமணம், கல்விக்கு இந்த நிதி செலவிடப்படும்.

    அடுத்த கல்வியாண்டில் 100 தொழில் பயிற்சி மையங்களை (ஐடிஐ) தொடங்க அரசுத்  திட்டமிட்டுள்ளது. இதுதவிர, 100 திறன் மேம்பாட்டு மையங்களும் திறக்கப்படும். முதல் கட்டமாக, தொழில் பயிற்சி மைய வளாகங்களிலேயே திறன் மேம்பாட்டு மையங்கள் இயங்கும்.

    ஆயத்த ஆடை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும் என அந்த நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். இந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியமான ரூ. 4,700-ஐ உயர்த்த விரைவில் முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai