Enable Javscript for better performance
கொள்ளை முயற்சி: நால்வர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரு அருகே கொள்ளையடிக்க முயன்றதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து மாநகரக் குற்றப் பிரிவு போலீஸார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    பெங்களூருவில் கொள்ளையடிக்க சிலர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸார் நடத்திய சோதனையில் ஜீவன் பீமாநகரைச் சேர்ந்த விஜயேந்திரா (41), பிரதீப்(32), இந்திராநகரைச் சேர்ந்த மூர்த்திகுட்டி (30), அல்சூரைச் சேர்ந்த கார்த்திக் (29) ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடமிருந்து மாருதி எஸ்டீம் கார், அரிவாள்கள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இவர்களில் இந்திராநகர் காவல் நிலைய ரெüடிகள் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் விஜயேந்திரா மீது 3 கொலை, திருட்டு வழக்குகள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல, ரெüடி பிரதீப் மீது கொலை, கொள்ளை, தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக 3 வழக்குகள் பதிவாகியுள்ளன. மூர்த்திக்குட்டி, கார்த்திக் மீதும் வழக்குகள் உள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai