சுடச்சுட

  

  சரோஜினி மஹிஷி அறிக்கையை திருத்த கன்னட அமைப்புகள் எதிர்ப்பு

  By பெங்களூரு  |   Published on : 10th November 2013 05:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சரோஜினி மஹிஷி அறிக்கையை திருத்தியமைக்க கன்னட அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

  பெங்களூரு சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் சனிக்கிழமை நடைபெற்ற சரோஜினி மஹிஷி அறிக்கை தொடர்பான கருத்தரங்கை சுதந்திரப் போராட்ட வீரர் துரைசாமி தொடக்கிவைத்தார்.

  இந்தக் கருத்தரங்கில் பல்வேறு கன்னட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசினர்.

  கன்னட சேனை அமைப்பின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பிரபாகர் ரெட்டி பேசியது:

  கர்நாடக முதல்வராக ராமகிருஷ்ண ஹெக்டே பதவி வகித்த போது, கன்னட மொழி மற்றும் கன்னடர்களின் மேம்பாட்டுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆராய அமைக்கப்பட்டதே சரோஷினி மஹிஷி குழு.

  இந்தக் குழு அளித்த அறிக்கையில் 58 பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் 45 பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதாக மாநில அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில், குழுவின் நோக்கத்தை சிதைக்கும் வகையில், சரோஜினி மஹிஷி அறிக்கையை கன்னட வளர்ச்சி ஆணையத் தலைவர் முக்கியமந்திரி சந்துரு திருத்தியமைத்துள்ளார்.

  அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள 24 அம்சங்களை காலத்திற்குப் பொருந்தாதவை என்று

  அவர் கைவிட்டுள்ளார். புதிதாக 15 அம்சங்களை சேர்த்துள்ளார். மஹிஷி அறிக்கையை திருத்த அனுமதிக்க முடியாது.

  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என சரோஜினி மஹிஷி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

  எனவே, அறிக்கையின் பரிந்துரைகளை திருத்தியமைக்காமல், அப்படியே அமல்படுத்த மாநில அரசு முன்வர வேண்டும் என்றார் அவர்.

  கருத்தரங்கில் கன்னடர்கள் வேலைவாய்ப்பு அமைப்புத் தலைவர் வினுதா, கன்னட வளர்ச்சி ஆணையத்தின் முன்னாள் தலைவர் சித்தலிங்கையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai