சீனாவில் முதலீடு: சி.ஆர்.ஐ.பம்ப் நிறுவனம் திட்டம்
By பெங்களூரு | Published on : 10th November 2013 05:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சீனாவில் முதலீடு செய்ய சி.ஆர்.ஐ.பம்ப் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூருவில் சனிக்கிழமை சி.ஆர்.ஐ.பம்ப் இந்தியா நிறுவனத் துணைத் தலைவர் ஜி.செüந்தரராஜன் வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவின் முன்னணி பம்ப் நிறுவனமாக விளங்கும் சி.ஆர்.ஐ.பம்ப் நிறுவனம், சீனாவில் தொழில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. சீனாவில் சி.ஆர்.ஐ.பம்ப்ஸ் சாங்காய் கம்பெனி நிறுவனம் என்ற பெயரில், நிகழாண்டு டிசம்பர் முதல் இயங்கத் தொடங்கும்.
சீனாவில் தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல் வேகமாக நடந்துவருவதன் விளைவாக அந்த நாட்டு அரசு, புதிய தண்ணீர், மின்சாரம் மற்றும் தொழில்சார்ந்த கொள்கைகளை வகுத்துள்ளன.
சீனாவின் பம்ப் சந்தை 2015-இல் 8.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்று கருதப்படுகிறது. ஆண்டுக்கு 13.5 மில்லியன் பம்ப் விற்பனையாகின்றன.
இதைக் கருத்தில் கொண்டு சீனச் சந்தையில் சி.ஆர்.ஐ. பம்புகளை சந்தைப்படுத்த முடிவு செய்துள்ளோம்.
முதல் கட்டமாக 6 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சீனாவில் முதலீடு செய்வோம். தொழில், சுரங்கம், பதனிடுதல், பிரஷர் பூஸ்டிங் சிஸ்டம்ஸ், கட்டுமான சேவைத் துறைகளில் பம்ப் விற்பனைக்கான வாய்ப்பில் கவனம் செலுத்துவோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.