சுடச்சுட

    

    மக்களவை தேர்தலையொட்டி, கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த, அந்த மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் ஞாயிற்றுக்கிழமை (நவ.10) முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கை:

    அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் தொண்டர்களைத் தயார்படுத்தவும், கட்சியைப் பலப்படுத்தவும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர் ஞாயிற்றுக்கிழமை (நவ.10) முதல் 4 நாள்களுக்கு மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இந்தப் பயணத்தின் போது, மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும். இந்தக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து கட்சி தொண்டர்களுடன் விவாதிக்கப்படும்.

    பெங்களூருவில் இருந்து ஹுப்ளி செல்லும் பரமேஸ்வர், ஞாயிற்றுக்கிழமை (நவ.10) முழுவதும் அந்த மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    தொடர்ந்து வருகிற 11-ஆம் தேதி பிஜாபூர் மாவட்டத்திலும், 12-ஆம் தேதி பாகல்கோட்டை, கதக், ஹாவேரி மாவட்டங்களிலும், 13-ஆம் தேதி ஹுப்ளி நகரம், ஊரக மாவட்டத்திலும் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    வருகிற 14-ஆம் தேதி தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, பெங்களூரு திரும்புகிறார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai