Enable Javscript for better performance
பாலியல் வன்கொடுமை தடைச் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பாலியல் வன்கொடுமை தடைச் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

    By பெங்களூரு,  |   Published on : 10th November 2013 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் பாலியல் வன்கொடுமை தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று, கிரிஸ்ப் தன்னார்வ தொண்டு நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

    இதுகுறித்து பெங்களூருவில் சனிக்கிழமை கிரிஸ்ப் அமைப்பின் தலைவர் குமார் ஜாகிர்தார் செய்தியாளர்களிடம் கூறியது:

    அண்மைகாலமாக குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 53 சத குழந்தைகள் ஏதாவது ஒரு வகையிலான பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    50 சத குழந்தைகள் ஏற்கெனவே அறிமுகமாகியுள்ள நபர்களாலேயே பாலியல் பலாத்காரத்திற்கு ஆள்படுகின்றனர். எனவே, பாலியல் பலாத்காரத்தில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க, பாலியல் வன்கொடுமை தடைச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

    இதேபோல, தொழிலாளர்களாக குழந்தைகளை ஈடுபடுத்துவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளை தொழிலாளர்களாக நடத்தும் நிறுவன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆண்டுதோறும் நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினத்தை கொண்டாடுவதோடு, குழந்தைகளைப் பாதுகாப்பதோடு, அவர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதும் மிகவும் முக்கியம்.

    நகர, கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கான உதவி மையங்கள் அமைக்க வேண்டும். மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறையை இரண்டாகப் பிரித்து, குழந்தைகள் நலத் துறையை தனியாக அமைக்க வேண்டும் என்றார் அவர்.  பேட்டியின் போது, சுமங்கலி சேவை மையத் தலைவர் பார்வதி, மகாராணி அரசு மகளிர் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai