Enable Javscript for better performance
பெல்காமில் நவம்பர் 25 முதல் சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டம் - Dinamani

சுடச்சுட

    

    பெல்காமில் நவம்பர் 25 முதல் சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டம்

    By பெங்களூரு,  |   Published on : 10th November 2013 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாட மாநிலம், பெல்காமில் சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத் தொடர் வருகிற 25-ஆம் தேதி தொடங்குகிறது.

    கர்நாடக மாநிலத்தின் 2-ஆவது தலைநகராகக் கருதப்படும் பெல்காமில், வருகிற 25-ஆம் தேதி முதல் சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத் தொடரை நடத்த அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான அதிகாரப்பூர்வ ஆணையை ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் சனிக்கிழமை பிறப்பித்தார்.

    பெல்காமில் அமைந்துள்ள சுவர்ண விதான செüதாவில் வருகிற 25-ஆம் தேதி காலை 11 மணிக்கு கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டமும், பிற்பகல் 12.15 மணிக்கு சட்ட மேலவைக் கூட்டமும் தொடங்குகிறது. இரு அவைகளும் வருகிற டிசம்பர் 6-ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு நடைபெறுகிறது. சட்டப்பேரவையின் நடவடிக்கைகள் குறித்த பட்டியல் இன்னும் தயாரிக்கப்படவில்லை. இந்தப் பட்டியல் வருகிற 11-ஆம் தேதி தயாராகிவிடும் என பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

    சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் சட்ட முன்வடிவுகள், கவன ஈர்ப்புத் தீர்மானங்கள், விவாதத் தலைப்புகள், கேள்வி நேரத்தில் எடுத்துக் கொள்ளப்படும் கேள்விகள், பூஜ்ய நேரத்தில் விவாதிக்கப்படும் பொருள்கள் உள்ளிட்டவற்றை சட்டப்பேரவைச் செயலகம் தயாரித்து வருகிறது.

    முந்தைய பாஜக ஆட்சியில் பெல்காமில் இருமுறை சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, பெல்காமில் நடத்தப்படும் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இது.

    இந்கக் கூட்டத்தில் ஆளும் கட்சிக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai