சுடச்சுட

  

  மோடி பங்கேற்கும் கூட்டம்: பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

  By பெங்களூரு,  |   Published on : 10th November 2013 05:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெங்களூருவில் பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி பங்கேற்கும் கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு அளிப்பது குறித்து பெங்களூருவில் காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

  பெங்களூரு அரண்மனை மைதானம் காயத்ரி விகாரில் வருகிற 17-ஆம் தேதி பாஜக சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டம், பேரணியில் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

  இந்த நிலையில், அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும், பொதுக் கூட்டம், பேரணி நடைபெறும் பகுதிகளில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுரத்கர் தலைமையில் காவல் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

  இந்தக் கூட்டத்தில் மோடி மற்றும் அவரது கூட்டத்தில் கலந்து கொள்ளும் பாஜக தொண்டர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

  மோடிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  பொதுக் கூட்டம், பேரணி நடைபெறும் போது, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai