Enable Javscript for better performance
இலவச கணினிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    இலவச கணினிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

    By பெங்களூரு,  |   Published on : 11th November 2013 06:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூரு கனரா வங்கியின் தகவல் தொழில்நுட்ப மையம் வழங்கும் இலவச கணினிப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    கனரா வங்கியால் தொடங்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப மையத்தில் ஏழைகள்,  வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச கணினிப் பயிற்சி அளிக்கப்படுகிறது. வன் பொருள், மென் பொருள் பயிற்சிகளுடன் ஆங்கில மொழி, ஆளுமைப் பயிற்சியும் தரப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு கட்டணம் இல்லை.

    நெட்வொர்க் நிர்வாகம் என்ற பயிற்சித் திட்டம் வருகிற டிசம்பர் 24-ஆம் தேதியும், அலுவலக நிர்வாகம், டெஸ்க்டாப் பப்ளிஷிங் பயிற்சித் திட்டங்கள் டிசம்பர் 27-ஆம் தேதியும் தொடங்குகின்றன.

    இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம். நேர்காணல் வருகிற 12-ஆம் தேதி காலை 11 மணிக்கு சித்ராபூர் மாளிகை, 8-ஆவது பிரதான சாலை, 15-ஆவது குறுக்குச் சாலை, மல்லேஸ்வரம், பெங்களூருவில் நடைபெறுகிறது.  மேலும் விவரங்களுக்கு 080-23440036 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai