Enable Javscript for better performance
இளைஞர் கொலை: நண்பர் கைது - Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரு அருகே இளைஞரைக் கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் அவரது நண்பரை போலீஸார் கைது செய்தனர்.

    கர்நாடக மாநிலம், குல்பர்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கண்ணா (25), சேகர் (28). நண்பர்களான இவர்கள், பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனராம். இந்த நிலையில், சனிக்கிழமை மது அருந்துவிட்டு இருவரும் தகராறில் ஈடுபட்டனராம். அப்போது, ஆத்திரமடைந்த சேகர் கத்தியால் கண்ணாவைக் குத்தினாராம்.

    இதில் பலத்த காயமடைந்த கண்ணா அதே இடத்திலே உயிரிழந்தார்.

    இதுகுறித்து பீன்யா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

    பெங்களூருவில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    பெங்களூரு எச்.ஏ.எல் ராஜப்பாநகரைச் சேர்ந்தவர் குந்தன்குமார். இவர், கடந்த வாரம் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு, சனிக்கிழமை இரவு வீட்டிற்கு வந்தாராம்.

    அப்போது, வீட்டின் பூட்டு உடைந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த குந்தன்குமார், வீட்டிற்குள் சென்று பார்த்த போது, ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 130 கிராம் தங்க நகைகள், ரூ. 60 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது.

    இதுகுறித்து எச்.ஏ.எல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இன்று குடிநீர்குறைதீர் முகாம்

    பெங்களூரு தெற்கு இரண்டாம் துணை மண்டலத்தில் திங்கள்கிழமை (நவ.11) குடிநீர் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

    இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    தெற்கு இரண்டாம் துணை மண்டலத்தில் உள்ள கொத்தனூர் தின்னே, ஜே.பி.நகர் இரண்டாவது பேஸ், விஜயாவங்கி காலனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் 11 மணிவரை குடிநீர் குறைதீர் முகாம் துணை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    இந்த முகாமில், தண்ணீர் ரசீது, குடிநீர் விநியோகத் தாமதம், கழிவுநீர் இணைப்பு, வியாபார இணைப்புகள் குடியிருப்பு இணைப்புகளாக மாற்றுவது போன்ற குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.  மேலும் விவரங்களுக்கு 22945267 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai