சுடச்சுட

  

  உழவுத் தொழிலில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்

  By பெங்களூரு,  |   Published on : 11th November 2013 06:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உழவுத் தொழில் நவீன தொழில்நுட்பங்களைக் கையாளுமாறு, பெங்களூருவில் நடைபெற்ற பன்னாட்டு வேளாண் கண்காட்சியில் முன்னோடி விவசாயிகள் அறிவுறுத்தினர்.

  பெங்களூரு விவசாயப் பல்கலைக்கழகம் சார்பில், பெங்களூரு காந்தி வேளாண் அறிவியல் மையத்தில் ஐந்து நாள்கள் நடைபெற்ற பன்னாட்டு வேளாண் கண்காட்சியின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  இந்த விழாவில் விவசாயிகளுக்கான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் முன்னோடி விவசாயி பசவராஜ் கெüஜகி பேசியது:

  விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்தினால், லாபகரமானத் தொழிலாக மாற்றியமைக்க முடியும். விவசாயப் பணிகளுக்கு பலவகையான கருவிகள் வந்துள்ளன. அவற்றை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.

  வேளாண் கண்காட்சிகளில் இதுபோன்ற கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். அதை விவசாயிகள் அறிந்து பயன்படுத்த வேண்டும். படித்த இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும்.

  நமது நாட்டின் உணவுத் தேவையை நிறைவு செய்வது விவசாயம். எனவே, இளைஞர்கள் விவசாயத்தில் அதிகம் ஈடுபட வேண்டும் என்றார் அவர்.

  மண்டியாவைச் சேர்ந்த விவசாயி சென்னே கெüடா பேசியது:

  விவசாயத் தொழில், அரசுப் பணி போல மாறி வருகிறது. அக்கறையுடன் செயல்பட்டால், விவசாயத்தை போல மகிழ்ச்சி தரக் கூடிய தொழில் வேறு இருக்க முடியாது. விவசாயத்தில் தொழில்நுட்பம், நவீனக் கருவிகளின் பயன்பாடு அதிகரிக்கப்பட வேண்டும்.

  விவசாயத் துறையில் நிகழும் புதிய கண்டுபிடிப்புகள் விவசாயிகளைச் சென்றடைந்தால்   மட்டுமே அதன் பலன் நாட்டுக்குக் கிடைக்கும்.

  விவசாயக் கருவிகளைக் கொள்முதல் செய்ய அரசு மானியம் தருகிறது என்றார் அவர்.

  ஐந்து நாள்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் மொத்தம் 10 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai