Enable Javscript for better performance
ஓவியப் போட்டிக்கு படைப்புகள் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

      தில்லியில் உள்ள மத்திய லலித்கலா அகாதெமி நடத்தும் ஓவியப் போட்டிக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

    இதுகுறித்து கர்நாடக லலித்கலா அகாதெமி வெளியிட்ட அறிக்கை:

    தில்லியில் உள்ள மத்திய லலித்கலா அகாதெமியின் 55-ஆவது ஆண்டு ஓவியப் போட்டி,  கண்காட்சியில் பங்கேற்க விரும்புவோரிடமிருந்து படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் 10 படைப்புகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும். இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ப்ஹப்ண்ற்ந்ஹப்ஹந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ர்ழ்ஞ் என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மேலும், கர்நாடக லலித்கலா அகாதெமி கன்னட மாளிகை ஜே.சி.சாலை பெங்களூரு என்ற முகவரியிலும் அணுகலாம். விண்ணப்பங்களை வருகிற 30-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.  மேலும் விவரங்களுக்கு 080-22480297 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai