சுடச்சுட

    

    கிராமியக் கலைகளை வளர்க்க இளைஞர்கள் முன்வர வேண்டும்

    By பெங்களூரு,  |   Published on : 11th November 2013 06:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிராமியக் கலையை வளர்க்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று, கர்நாடக வேளாண் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகெüடா வலியுறுத்தினார்.

    பெங்களூரு ஊரகம், தேவனஹள்ளியில் யுவஜோதி இளைஞர்கள் சங்கம் சார்பில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் அவர் மேலும் பேசியது:

    நமது கிராமியக் கலைக்கு நீண்ட வரலாறு உள்ளது. இதேபோல, நமது இலக்கியம், இசை, கலாசாரத்திற்கும் குறிப்பிடத்தகுந்த வரலாறு உள்ளன. ஆனால், இவற்றை மறந்து இளைஞர்கள் வெளிநாட்டு கலாசாரத்தில் மூழ்கி உள்ளனர்.

    இந்த நிலையில், யுவஜோதி இளைஞர்கள் சங்கத்தினர் நமது முன்னோர்கள் வளர்த்த கிராமியக் கலையை முன்னெடுத்து செல்வதில் ஆர்வம் காட்டுவது பாராட்டுக்குரியது. இவர்களை போல, கர்நாடகம் முழுவதும் கிராமியக் கலைகளை பரப்பவும், பாதுகாக்கவும்  இளைஞர்கள் முன்வர வேண்டும்.

    விழாவில் எம்எல்ஏ தேபில்ல முனியப்பா, கர்நாடக முன்னாள் எம்.எல்.ஏ. கே. வெங்கடசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai