சுடச்சுட

  

  பெங்களூருவில் இன்று முதல் இலவச யோகா பயிற்சி

  By பெங்களூரு  |   Published on : 11th November 2013 06:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெங்களூருவில் இலவச யோகா பயிற்சி முகாம் திங்கள்கிழமை (நவ.11)தொடங்குகிறது.

  இதுகுறித்து பெங்களூரு ஏ.பி.எஸ்.கல்வி அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கை:

  ஸ்ரீபாலாஜி யோகா மையத்தின் உதவியுடன், அறக்கட்டளை சார்பில், இலவச யோகா பயிற்சி முகாம் திங்கள்கிழமை (நவ.11) தொடங்குகிறது. பெங்களூரு என்.ஆர்.காலனியில் அமைந்துள்ள ஏபிஎஸ் மைதானத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை இந்தப் பயிற்சி நடைபெறுகிறது. வருகிற 17-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில்,  மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியோர் என அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம்.

  யோகா பயிற்சி முகாமை பிரபல யோகா அறிஞர் சீனிவாஸ் மூர்த்தி நடத்துகிறார். மேலும் விவரங்களுக்கு 9880919752, 9731123792, 9880470544 ஆகிய செல்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai