சுடச்சுட

  

  கரும்பு கொள்முதல் விலையை மறு பரிசீலனை செய்ய வேண்டும்

  By பெங்களூரு,  |   Published on : 12th November 2013 06:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கரும்பு கொள்முதல் விலையை மாநில அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று, முன்னாள் பிரதமர் தேவகெüடா வலியுறுத்தினார்.

  இதுகுறித்து பெங்களூருவில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

  கரும்பு கொள்முதல் விலையை ஒரு டன்னுக்கு ரூ.2,500-ஆக மாநில அரசு நிர்ணயித்துள்ளது. கரும்பு விவசாயிகளின் நலன் கருதி இந்தக் கொள்முதல் விலையை மாநில அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். கரும்பு கொள்முதல் விலையை ஒரு டன்னுக்கு ரூ.3,500-ஆக நிர்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை வைத்திருப்பதில் தவறு இல்லை.

  விவசாயிகளுக்கு லாபம் தராவிட்டாலும், உற்பத்திச் செலவையாவது தர வேண்டியது அரசின் கடமையாகும்.

  கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளின் நலன் முக்கியம்.

  சர்க்கரை ஆலைகளுக்கு மாநில அரசு ஏராளமானச் சலுகைகளை அளித்துவந்துள்ளது.

  சர்க்கரை தவிர கரும்புக் கழிவுப் பொருள், எரி சாராயம், மின் உற்பத்தி போன்ற துணை வருவாய் ஆதாரங்கள் சர்க்கரை ஆலைகளுக்கு இருக்கின்றன.

  ஆனால், விவசாயிகளுக்கு உற்பத்திப் பொருளை ஈடு செய்ய வேறு வழியில்லை. கரும்புக்கு கொள்முதல் விலை நிர்ணயிக்க வலியுறுத்தி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதுவேன்.

  5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்த பிறகு, வேளாண் விளை பொருள் விலை நிர்ணயக் கொள்கையை வகுக்கும்படி பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து வலியுறுத்துவேன்.

  கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக வீதியில் இறங்கி நான் போராட்டம் நடத்தினால், அரசியல் செய்வதாக விமர்சிப்பார்கள். எனவே, வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வரும் கரும்பு விவசாயிகளுக்கு எனது ஆதரவு உண்டு என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai