Enable Javscript for better performance
கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நரேந்திர மோடி பணம் வசூல்- Dinamani

சுடச்சுட

    

    கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நரேந்திர மோடி பணம் வசூல்

    By பெங்களூரு,  |   Published on : 12th November 2013 06:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை நிறுவ கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நரேந்திர மோடி பணத்தை வசூல்

    செய்ய முடிவு செய்துள்ளதாக, சட்ட மேலவை முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் உக்கரப்பா தெரிவித்தார்.

    இதுகுறித்து திங்கள்கிழமை பெங்களூருவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

    பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, வல்லபாய் பட்டேலுக்கு சிலை அமைக்க ரூ. 2 ஆயிரம் கோடி பணத்தை வசூல் செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால், உண்மையில் அவர் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ரூ. 10 ஆயிரம் கோடி கருப்பு பணத்தை வசூல் செய்து, அதைச் சிலை அமைப்பதற்கு பதிலாக, வரும் மக்களவைத் தேர்தலில் செலவு செய்ய முடிவு செய்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக குஜராத் முதல்வராக பதவி வகித்து வரும் நரேந்திர மோடிக்கு சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவு வராமல், தற்போது வந்துள்ளது ஆச்சரியமாக உள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட பலரைத் தரக் குறைவாக விமர்ச்சிப்பதன் மூலம் அவர் ஹிட்லரைப் போல நடந்து கொள்கிறார். பிரதமர் கனவில் மிதக்கும் நரேந்திர மோடிக்கு தேர்தலில் மக்கள் உரிய பதிலை அளிப்பர் என்றார் அவர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai