சுடச்சுட

  

  கார் கவிழ்ந்து தனியார் பாதுகாப்பு ஊழியர் சாவு

  By பெங்களூரு  |   Published on : 12th November 2013 06:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அசோக் நகர் காவல் சரகத்தில் கார் கவிழ்ந்ததில், தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

  பெங்களூரு ஒயிட்பீல்டைச் சேர்ந்தவர் அஸ்வத்நாராயண் (30). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்தார். திங்கள்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் சக ஊழியர்களுடன் காரில் விஜயநகருக்கு சென்றாராம். எம்.ஜி.சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதியது. இதில், அஸ்வத்நாராயண் சென்ற கார் கவிழ்ந்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சுந்தராஜ், சிவக்குமார் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து அசோக் நகர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

  பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

  பெங்களூரு, நவ.11:  பெங்களூரில் வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்ணிடம் ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

  பெங்களூரு ஹென்னூர் சிக்கண்ணா லேஅவுட்டைச் சேர்ந்தவர் ஸ்ருதி. இவர் திங்கள்கிழமை காலை 6.30 மணியளவில் தனது வீட்டு வாசலில் கோலம் போட்டாராம். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள் அவரது கழுத்திலிருந்த ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியைப் பறித்து விட்டுத் தப்பி ஓடினர். இதுகுறித்து ஹென்னூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

  கொலை செய்ய திட்டம்:

  4 பேர் கைது

  பெங்களூரு, நவ.11:  பெங்களூருவில் கொலை செய்யத் திட்டமிட்டுப் பதுங்கியதாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

  பெங்களூரு கொடிகேஹள்ளி ஸ்ரீனிவாஸ் (25), சஞ்சய் நகர் ராமமூர்த்தி (36), கெத்தளஹள்ளி கார்த்திக் (21), ராஜேஷ் (25) ஆகிய 4 பேரும் தங்களது எதிரணியைச் சேர்ந்தவர்களைக் கொலை செய்யத் திட்டமிட்டு சஞ்சய் நகர் காவல் சரகத்தில் பதுங்கியிருந்தனராம். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், 4 பேரையும் கைது செய்து, கத்தி, சூரிக் கத்தி, அரிவாள், மிளகாய்ப் பொடி பொட்டலங்கள், கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை செய்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai