Enable Javscript for better performance
கே.ஆர். மார்க்கெட்டை சுத்தம் செய்த சின்னத்திரை நட்சத்திரங்கள்- Dinamani

சுடச்சுட

    

    கே.ஆர். மார்க்கெட்டை சுத்தம் செய்த சின்னத்திரை நட்சத்திரங்கள்

    By பெங்களூரு,  |   Published on : 12th November 2013 06:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூரு கே.ஆர்.மார்க்கெட்டை சுத்தம் செய்யும் பணியில் கன்னட சின்னத் திரை நட்சத்திரங்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

    பெங்களூரு கே.ஆர்.மார்க்கெட்டை சுத்தம் செய்யும் பணியில் மேயர் சத்தியநாராயணா தலைமையில் கன்னட சின்னத் திரை நட்சத்திரங்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனர். காலை 8.30 மணியளவில் தொடங்கிய பணி, 10.30-க்கு முடிவடைந்தது.

    இதுகுறித்து சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் கூறியது: பெங்களுரூ மேயர் சத்தியநாராயணா, கே.ஆர்.மார்கெட்டை சுத்தப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

    அவருக்கு எங்களின் ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், இன்று சுத்தம் செய்யும் பணியில் அவருடன் நாங்களும் ஈடுபட்டோம். இதுபோன்ற தொடர் நடவடிக்கையால் காய், கனி, மீன், பூ சந்தைகள் தூய்மையாகி வருகின்றன.  வியாபாரிகள் இந்த மார்கெட்டை 365 நாளும் தூய்மையாக வைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

    தூய்மைப்படுத்தும் பணியில் சின்னத்திரை நட்சத்திரங்கள் சுனில், பூர்ணிகா, ரத்னமாலா, புஷ்பா, நாராயணசாமி, குருராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai