சுடச்சுட

  

  "தனியார் நியாய விலை அங்காடிகளின் உரிமத்தை ரத்து செய்ய யோசனை'

  By பெங்களூரு,  |   Published on : 12th November 2013 06:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தனியார் நியாய விலை அங்காடிகளின் உரிமத்தை ரத்து செய்வது குறித்து அரசு யோசித்து வருவதாக, உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

  பெங்களூருவில் திங்கள்கிழமை குடும்ப அட்டைகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள், முறைகேடுகள் குறித்து மாநகராட்சி மேயர், மாநகர எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

  குடும்ப அட்டைகளை வழங்குவதில் ஏற்பட்டு வரும் குளறுபடிகள் மற்றும் முறைகேடுகளை முடிவுக்கு கொண்டு வர, தனியார் நடத்தி வரும் நியாய விலை அங்காடிகளின் உரிமத்தை ரத்து செய்வது குறித்து அரசு யோசித்து வருகிறது. புதிய நியாய விலை அங்காடிகளை நடத்தும் பொறுப்பு கிராமப் பஞ்சாயத்துகள், நகரப் பஞ்சாயத்துகள், சங்கங்கள், சுய உதவிக் குழுக்களிடம் ஒப்படைக்கப்படும். இனிமேல், நியாய விலை அங்காடிகளை நடத்தும் உரிமத்தை தனியாருக்கு அளிக்கப்படமாட்டாது.

  பயனாளிகளுக்கு பயனளிக்கும் வகையில், எந்த நியாய விலை அங்காடிகளில் வேண்டுமானாலும் பயன்படுத்தக் கூடிய கணினி அடிப்படையிலான ஸ்மார்ட் அட்டைகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளோம். நியாய விலை அங்காடிகளை, வாக்குச் சாவடிகளுடன் இணைக்க யோசித்து வருகிறோம். மாதம் தோறும் 1-ஆம் தேதி அன்று உணவுப் பொருள்கள் நியாய விலை அங்காடிகளில் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யப்படும். மேலும், குறைந்தப்பட்சம் 10 நாள்களுக்கு அங்காடிகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு உணவுப் பொருள்களை விநியோகிக்க உத்தரவிட்டுள்ளோம்.

  புதிய குடும்ப அட்டைகளைப் பெற 30 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த அட்டைகளை விநியோகித்த பிறகு, போலி குடும்ப அட்டைகளைக் கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்படும். மாநிலத்தில் தற்போது 1.35 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றில் போலி குடும்ப அட்டைகள் களையப்பட்டு, தகுதியானவர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai