சுடச்சுட

  

  தனியார் வாகனங்களை விதிகளை மீறி இயக்கினால் கடும் நடவடிக்கை

  By பெங்களூரு  |   Published on : 12th November 2013 06:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தனியார் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாநில அரசின் போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

  இதுகுறித்து மாநில அரசின் போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  உரிம விதிமுறைகளை மீறி தனியார் வாகனங்கள் இயக்கப்படுவதாக பொதுமக்களிடமிருந்து அரசுக்கு புகார்கள் வந்துள்ளன.

  இதைத் தொடர்ந்து, பயணிகளின் நலன் கருதி வாகனச் சோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் வாகன உரிமங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

  மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் அவசர வாயில் இருக்க வேண்டியது அவசியம்.

  அவசரக் காலத்தில் பாதுகாப்பாக தப்பிக்கும் முறைகள் குறித்து பயணிகளுக்கு பயணத்திற்கு முன்பு தெரிவிக்க வேண்டும்.

  பயணிகளுக்கு சொந்தமில்லாத வணிகப் பொருள்களை பேருந்தில் ஏற்றிச் செல்லக் கூடாது.

  வேதிப் பொருள்கள், வெடிப் பொருள்கள், தீப்பற்றக் கூடியப் பொருள்கள், தீங்கிழைக்கும் தன்மை கொண்ட பொருள்களைக் கட்டாயமாக வாகனங்களில் கொண்டு செல்லக்கூடாது.

  2011 நவ.2-ஆம் தேதி முதல் பதிவு செய்யப்படும் புதிய வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

  வாகனங்கள் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்.

  வாகனங்களில் பயணிக்கும் பயணிகளின் பெயர், முகவரி, வயது, பாலினம், புறப்படும் இடம், சேரும் இடங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியலை, பேருந்து உரிமையாளர்கள் வைத்திருக்க வேண்டும். இந்தப் பட்டியலை 3 மாதங்களுக்கு ஒருமுறை அரசிடம் அளிக்க வேண்டும். வாகனங்களை நல்ல நிலையில் பராமரிக்க வேண்டும்.

  வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் பேருந்தில் வைத்திருப்பது அவசியம்.

   மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர் சட்டப்படி, ஓட்டுநரின் பணிக் காலம் 8 மணி நேரம் மட்டுமே.

  இந்த விதிகளை மீறும் வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

  எனவே, சோதனையின் போது வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் போக்குவரத்து அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai