Enable Javscript for better performance
 காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது: கர்நாடகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

     காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது: கர்நாடகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தல்

    By dn  |   Published on : 13th November 2013 05:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று, கர்நாடகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியது.

    இதுகுறித்து அந்தக் குழுவின் தலைவர் தேவதாஸ் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

    ஆங்கிலேயர்கள் இலங்கையை ஆட்சி செய்த போது, வட கிழக்கு பகுதியில் தமிழர்களும், மற்ற பகுதிகளில் சிங்களவரும் வசித்து வந்தனர். இலங்கை விடுதலையடைந்த பிறகு, 1948- இல் அந்த நாட்டின் முதல் குடியரசுத் தலைவரான சேனாநாயகா, தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளையும் ஒன்றிணைந்த இலங்கை என்று அறிவித்தார்.

    ஆனாலும், தமிழர்கள் அந்த நாட்டில் அடிமைகளாக நடத்தப்பட்டனர். இதை எதிர்த்து நடைபெற்ற உள்நாட்டு போரில், 1.5 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்த நிலையில், இலங்கையில் ராஜபக்சே தலைமையில் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வதில்லை என்று கடிதம் எழுதியுள்ளார்.

    ஆனால், இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையில் அதிகாரிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த நிலையில், இலங்கையில் வட கிழக்கு பகுதியில் தமிழர்களின் உண்மை நிலைமை கண்டு அறிவதற்காக சென்ற ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டின் செனட் உறுப்பினர்கள் லீரைனான், ஜான்லோகி ஆகியோரை செய்தியாளர்கள் சந்திக்க விடாமல் இலங்கை அரசு கைது செய்துள்ளது.

    இது அந்த நாட்டின் உண்மையான சுயரூபத்தை காட்டுகிறது. எனவே, மனித உரிமைகளை மீறியுள்ள இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்றார் அவர்.

    பேட்டியின் போது, கர்நாடக கன்னடர், தமிழர் கூட்டமைப்பின் தலைவர் ஐ.எம்.எஸ் மணிவண்ணன், எழுத்தாளர் பாவிசைக்கோ, ரங்கநாதன், நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து 

    கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai