சுடச்சுட

  

   "ஸ்டெம் செல்கள் மூலம் செயலிழந்த பகுதிகளை மீண்டும் இயங்கச் செய்யலாம்'

  Published on : 13th November 2013 05:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஸ்டெம் செல்களை அதிகரிப்பதன் மூலம் உடலில் செயலற்ற பகுதிகளை மீண்டும் இயங்கச் செய்யலாம் என்று, பெங்களூரு லைவ் 100 மருத்துவமனையின் இயக்குநர் நாகராஜ் தெரிவித்தார்.

  பெங்களூருவில் அந்த மருத்துவமனை சார்பில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியது:

  முதுகுத்தண்டில் எதிர்பாராதவிதமாக அடிபடுதவதாலும், விபத்துகளால் முதுகுதண்டு பாதிக்கப்படுவதாலும்  உடலில் கை, கால்கள், இடுப்பு உள்ளிட்ட பகுதிகள் செயலிழக்கும். உடலில் ஸ்டெம் செல்களை அதிகரிப்பதன் மூலம், செயலிழந்தப் பகுதிகளை மீண்டும் இயக்கச் செய்யலாம்.

  எனவே, உடலில் சில பகுதிகள் செயலிழந்தால் யாரும் மன தைரியம் இழக்காமல், அதற்கு  உரிய சிகிச்சை பெற்று ஆரோக்கியமாக வாழலாம் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai