சுடச்சுட

  

  எழுத்தாளர்களுக்கு சமூக சிந்தனை அவசியம்: அமைச்சர் ராமலிங்க ரெட்டி

  Published on : 13th November 2013 05:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  எழுத்தாளர்களுக்கு சமூக சிந்தனை அவசியம் இருக்க வேண்டும் என்று,  கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.

  பெங்களூரு ரவீந்திர கலாஷேத்ராவில் மாநகரப் போக்குவரத்துக் கழகம், கன்னட சாகித்ய பரிஷத் ஆகியவை சார்பில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இலக்கியவாதி பரகூர் ராமசந்திரப்பாவிற்கு நிருபதுங்கா விருது வழங்கும் விழாவில் அவர் மேலும் பேசியது:

  கன்னட மொழியை சிறப்பாக கையாளுவதில் சிறந்தவராக விளங்கும் பரகூர் ராமசந்திரப்பாக்கு விருது வழங்கப்பட்டது மகிழ்ச்சியை அளிக்கிறது.

  நமது சமூகத்தின் மீது அக்கறை உள்ள இவர், தலித், சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக தனது எழுத்தைப் பயன்படுத்தினார்.

  கன்னட இலக்கியத்தை திறம்பட கையாளுவதில் அவர் வல்லவர். இவரை போல எழுத்தாளர்கள் அனைவருக்கும் சமூக சிந்தனை அதிகம் இருக்க வேண்டும் என்றார் அவர்.

  பரகூர் ராமசந்திரப்பா பேசியது:

  எழுத்தாளர்கள் மட்டுமன்றி அரசியல்வாதிகளும் சமூக சிந்தனையுடன் செயலாற்ற வேண்டும். ஜாதி, மதங்களால் சமூகம் பிளவுபடுவதைத் தடுக்க அனைவரும் முன்வர வேண்டும். மதங்களின் பெயரால் அரசியல் செய்பவர்களையும், எழுதுபவர்களையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai