சுடச்சுட

  

  கர்நாடக காங்கிரஸ் ஆட்சியில் முறைகேடுகள் அதிகரித்துள்ளன: ஜெகதீஷ் ஷெட்டர் குற்றச்சாட்டு

  By மைசூர்  |   Published on : 13th November 2013 05:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் முறைகேடுகள் அதிகரித்து வருவதாக, அந்த மாநில முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் குற்றஞ்சாட்டினார்.

  பெங்களூருவில் குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்திற்கான பிரசார நடைபயணத்தை மைசூரில் திங்கள்கிழமை தொடக்கிவைத்து அவர் மேலும் பேசியது:

  கர்நாடகத்தில் அதிகரித்து வரும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஆளுமை முதல்வர் சித்தராமையாவிடம் இல்லை. ஊழல் செய்வது காங்கிரஸின் கலாசாரம். இந்தியாவை ஊழலற்ற நாடாக மாற்ற நரேந்திர மோடி பிரதமராக வேண்டும். பாஜக மேற்கொண்டுள்ள இந்த நடைபயணம் மூலம் மத்திய அரசின் ஊழல்கள் குறித்தும், மோடியை பிரதமராக்க ஆதரவு தரக் கோரியும் பொதுமக்களிடம் பிரசாரம் செய்யப்படும் என்றார் ஜெகதீஷ் ஷெட்டர்.

  கர்நாடக முன்னாள் அமைச்சர் எஸ்.வி.ராமதாஸ் உள்ளிட்டோர் நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai