சுடச்சுட

  

  திருமண நிதியுதவித் திட்டம் அனைத்து சமுதாயத்திற்கும் விரிவுபடுத்த ஆலோசனை : சித்தராமையா

  By dn  |   Published on : 13th November 2013 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   கர்நாடகத்தில் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஏழைப் பெண்களுக்கும் திருமண நிதியுதவித் திட்டத்தை விரிவுபடுத்த ஆலோசிக்கப்படுவதாக, அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

  பெங்களூரு அரசு இல்லம் கிருஷ்ணாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் தரிசனம் நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

  சிறுபான்மை ஏழைப் பெண்களுக்கு வழங்கப்படும் திருமண நிதியுதவித் திட்டத்தை அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஏழைப் பெண்களுக்கும் விரிவுபடுத்தக் கோரி, தொடர் தர்னாவில் ஈடுபட்டுள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம் பேச்சுவார்த்தை நடத்த அரசு பிரதிநிதி ஒருவர் அனுப்பி வைக்கப்படுவார்.

  எனினும், அவரது போராட்டம் அரசியல் நோக்கம் கொண்டது. மாநிலத்தில் வறட்சி மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தொகுதிக்கான வளர்ச்சி நிதி ரூ. ஒரு கோடியிலிருந்து ரூ. 2 கோடியாக உயர்த்தப்படும். அனைத்து தொகுதிகளுக்கு வளர்ச்சி நிதி ரூ. ஒரு கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே இதுகுறித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

  விவசாயிகளுடன் ஆலோசனை செய்து அவர்களின் ஒப்புதலின் பேரில், கரும்பு டன்னுக்கு ரூ. 2,500 கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரி வருகின்றனர்.

  ஆனால், கொள்முதல் விலையை மீண்டும் உயர்த்துவது குறித்து பரிசீலிக்கும் எண்ணமில்லை. மூடநம்பிக்கை தடைச் சட்ட மசோதைவை முழுமையாகப் பரிசீலிக்கப்படும். கர்நாடகத்தில் உள்ள அனைத்து துறைகளும் சிறப்பான வளர்ச்சி அடைய வேண்டும் என்பது அரசின் நோக்கம் என்றார் சித்தராமையா.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai