சுடச்சுட

    

    நிதி இல்லாததால் வளர்ச்சி திட்டங்களை கைவிடும் அபாயம்

    By dn  |   Published on : 13th November 2013 05:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடக அரசிடம் வளர்ச்சிப் பணிகளுக்குத் தேவையான நிதி இல்லாததால், பல்வேறுத் திட்டங்களைக்  கைவிடும் சூழல் உருவாகியுள்ளதாக முன்னாள் முதல்வர் சதானந்த கெüடா தெரிவித்தார்.

    கர்நாடக மாநிலம், சிக்மகளூர்

    என்.ஆர்.புராவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக  செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

    முதல்வர் சித்தராமையா பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அறிவித்து வருகிறார். ஆனால், அரசிடம் தேவையான நிதி இல்லை.

    அன்னபாக்யா திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த தேவையான நிதி இல்லாததால், அந்தத் திட்டம் கைவிடும் சூழல் உருவாகியுள்ளது.

    இதேபோல, திருமண நிதியுதவித் திட்டத்தை செயல்படுத்தவும் அரசிடம் நிதியில்லை. பொதுமக்களின் வாக்குகளை பெறுவதற்காகவே இதுபோன்ற திட்டங்களை சித்தராமையா செயல்படுத்தியுள்ளார்.

    மூடநம்பிக்கை தடுப்புச் சட்டத்தை கொண்டு வருவதன் மூலம் மதநம்பிக்கையை சீர்குலைக்க

    முயல்கிறார் சித்தராமையா. மத்திய அரசு தீவிரவாதத்தைத் தடுக்கும் நடவடிக்கையில் தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் அரசு பல்வேறு ஊழல்களில் சிக்கித் தவிக்கிறது.

    எனவே, மக்களவைத் தேர்தலில் காங்கிரûஸ மக்கள் தோல்வியடையச் செய்வார்கள் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai