Enable Javscript for better performance
புதிதாக 100 தொழில் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் டி.பரமேஸ்வர் நாயக்- Dinamani

சுடச்சுட

    

    புதிதாக 100 தொழில் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் டி.பரமேஸ்வர் நாயக்

    By dn  |   Published on : 13th November 2013 05:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகம் முழுவதும் புதிதாக 100 தொழில் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று, அந்த மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் டி.பரமேஸ்வர்  நாயக் தெரிவித்தார்.

    இதுகுறித்து பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

    கர்நாடகம் முழுவதும் அமைக்கப்பட உள்ள தொழில் பயிற்சி மையங்களுக்கு ரூ. ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 2013-14-ஆம் நிதியாண்டில், 35 தொழில் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இந்த தொழில் பயிற்சி மையங்கள் மூலம் 60 ஆயிரம் பேர் பயனடைவர். இந்த மையங்களில் பயிற்சி அளிக்க இரண்டாயிரம் பேர் விரைவில் நியமிக்கப்படுவர். கர்நாடகத்தில் பழைமையான 25 அரசு தொழில் பயிற்சி மையங்கள் தலா ரூ. 2 கோடியில் புணரமைக்கப்படும். இதற்காக ரூ. 50 கோடி நிதி ஒதுக்கப்படும். நபார்டு வங்கி உதவியுடன் 22 அரசு தொழில் பயிற்சி மையங்கள் புணரமைக்கப்படுகின்றன. மத்திய அரசின் நிதி உதவியுட மைசூர், பெல்லாரியில் புதிய தொழில் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்.

    குறைந்தபட்ச ஊதியத்தை அமலாக்காத 7,000 தனியார் நிறுவனங்களுக்கு ரூ. ஒரு கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.  இதேபோல, தனியார் நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ. 11 கோடி நிவராணம் வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai