சுடச்சுட

  

  மோடி வருகையையொட்டி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: 151 பேர் கைது

  Published on : 13th November 2013 05:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெங்களூருவில் வருகிற 17-ஆம் தேதி பாஜக சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மோடி பங்கேற்பதையொட்டி, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையா 151 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

  பெங்களூரு சாம்ராஜ்பேட்டை, ஜே.பி.நகர், ஆடுகோடி, பசவனகுடி, சி.கே.அச்சகட்டு, ஹனுமந்தநகர், ஜெயநகர், சுப்ரமண்யபுரா, கிரிநகர், சித்தாபுரா, தியாகராஜநகர், கே.எஸ்.லேஅவுட், சென்ட்ரல், கே.ஜி.நகர், பனசங்கரி, சங்கரபுரம் உள்ளிட்ட 16 காவல் சரகங்களில் உள்ள பிரபல ரெüடிகளின் வீடுகளில் தென்மண்டல காவல் துணை ஆணையர் ரேவண்ணா தலைமையில் சோதனை நடத்தப்பட்டன.

  இதைத் தொடர்ந்து, குற்றப் பின்னணி உள்ள 361 பேரை காவல் நிலையங்களுக்கு அழைத்து சென்ற போலீஸôர், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து 151 பேர் கைது செய்யப்பட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai