சுடச்சுட

  

  வன்கொடுமைகளைத் தடுக்க பெண்களுக்கு விழிப்புணர்ச்சி அவசியம் என்று, மகளிர் விழிப்புணர்வு பிரசார ஒருங்கிணைப்பாளர் சோனாலிகான் தெரிவித்தார்.

  பெங்களூருவில் பெண்களுக்கான விழிப்புணர்வு பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்து அவர் பேசியது:

  நாட்டில் பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.  இதுகுறித்த விழிப்புணர்வு பெண்களிடம் குறைவாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, கர்நாடகத்தில் பெங்களூரு, பெங்களூரு ஊரகம், உடுப்பி, குந்தாப்புரா ஆகிய நான்கு மாவட்டங்களில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வன்கொடுமைக்கு எதிரான பிரசாரத்தை தொடங்கியுள்ளோம்.

  வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் எங்களுடன் 1091 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

  என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai