Enable Javscript for better performance
இன்று இலவச நீரிழிவு கண்நோய் மருத்துவமுகாம்- Dinamani

சுடச்சுட

    

    இன்று இலவச நீரிழிவு கண்நோய் மருத்துவமுகாம்

    By பெங்களூரு  |   Published on : 14th November 2013 03:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூருவில் வியாழக்கிழமை இலவச நீரிழிவு கண்நோய் மருத்துவ சோதனை முகாம் நடத்தப்படுகிறது.

    இது குறித்துரங்கலட்சுமி கண் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நவ.14-ஆம் தேதி உலக நீரிழிவுதினமாக அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு ரங்கலட்சுமி கண்மருத்துவமனை சார்பில் பெங்களூருவில் யலஹங்கா மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரங்களில் வியாழக்கிழமை நடமாடும் இலவச நீரிழிவு கண்நோய் மருத்துவசோதனை முகாம் நடத்தப்படும். நீரிழிவுநோயால் ஏற்பட்டுள்ள கண்பாதிப்புகள் கண்டறியப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள் அளிக்கப்படும். முகாமில் டாக்டர்.ஜி.வெங்கடசுப்ரமணியன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பங்கேற்கிறார்கள். காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை யலஹங்கா, வித்யாரன்யபுரா, கொடிகேஹள்ளி, ஜக்கூரில் முகாம் நடத்தப்படும். மேலும் விவரங்களுக்கு 9845138423, 9535097713 என்ற செல்பேசிஎண்களில் தொடர்புக்கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai