சுடச்சுட

  

  நரேந்திரமோடியின் கர்நாடக வருகைக்கு 130 சமூக அமைப்புகள் எதிர்ப்பு

  By பெங்களூரு  |   Published on : 14th November 2013 03:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் மாநில முதல்வருமான நரேந்திரமோடியின் கர்நாடக வருகைக்கு 130 சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

  இதுகுறித்துபெங்களூருவில் புதன்கிழமை கர்நாடக மதநல்லிணக்க இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கே.எச்.அசோக், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடி, நவ.17-ஆம் தேதி பெங்களூருவுக்கு வருகைதருகிறார். இதை கடுமையாக எதிர்க்கும் 130 சமூக அமைப்புகள், நவ.17-ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துகின்றன. நரேந்திரமோடியை எதிர்த்து 9 மாவட்ட தலைநகரங்களில் 130 அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அமைதிப்பூங்காவாக விளங்கும் கர்நாடகத்திற்கு நரேந்திரமோடி வருவதுசரியல்ல. நரேந்திரமோடி பிரதமராவது நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, நரேந்திரமோடியை மக்களவை தேர்தலில் தோற்கடிக்கும் வகையில்,மோடியை தோற்கடித்து, இந்தியாவுக்கு வாகைச்சூடுஎன்ற பிரசாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறோம். பெங்களூருவில் டவுன்ஹாலில் இருந்து பன்னப்பாபூங்காவரை பேரணி நடத்தப்படும். பின்னர், பன்னப்பாபூங்காவில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.

  முன்னாள் அமைச்சர் ஏ.கே.சுப்பையா பேசியது: இந்தியாவின் மதவாதிகளின் பிரதிநிதியாக மோடி விளங்குகிறார். நமதுநாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக, மோடியை தோற்கடிக்க வேண்டியுள்ளது. இந்தியா என்றால், மோடி என்பதுபோல பிரபலப்படுத்துகிறார். மோடி வென்றால் கார்ப்பரேட் நிறுவனங்கள் வென்று, இந்திய மக்களை தோற்கடிப்பார்கள் என்பதை மக்கள் மறக்கக்கூடாது. கர்நாடகத்தில் மக்கள் எதிர்ப்பார்ப்புக்கு தகுந்தபடி காங்கிரஸ் அரசு செயல்படவில்லை என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai