சுடச்சுட

  

  பிரபல நிறுவனங்கள் பெயரில் போலி ஜவுளிகள் விற்பனை: 2 பேர் கைது

  By பெங்களூரு  |   Published on : 14th November 2013 02:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிரபல நிறுவனங்கள் பெயரில் போலி ஜவுளிகள் விற்பனை செய்த 2 பேர் கைது செய்து, ரூ.13.65 மதிப்புள்ள ஜவுளிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

  பெங்களூரு பெல்லாரி சாலை புவனேஸ்வரிநகர் ராகேஷ் (32), சங்கர் (24). இவர்கள் கங்காநகர் 4-வது முக்கியச்சாலையில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி ஜவுளிகளை விற்பனை செய்து வந்தனராம். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார், 2 பேரையும் கைது செய்து, ரூ. 13.65 லட்சம் மதிப்புள்ள போலி ஜவுளிகளை பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து ஆர்.டி.நகர் போலீஸார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

  பெண்களிடம்  மிரட்டி நகை பறிப்பு: ஒருவர் கைது

  தும்கூர் மாவட்டம் குனிகல் வட்டம் உஜ்ஜைனி கிராமத்தைச் சேர்ந்தவர் கிரியப்பா (30). இவர் பெங்களூரு பகுதிகளில்தனியாக இருந்த செüம்யா என்பவரை கத்தியைக் காட்டி மிரட்டி, தங்கநகைகளை பறித்துச் சென்றுள்ளார். இது குறித்து வழக்கு பதிந்த போலீஸார், கிரியப்பாவை கைது செய்து, ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 204 கிராம் தங்கநகைகளை பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து காமாட்சிபாளையா போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

   

  இருசக்கரவாகனங்கள் திருட்டு வழக்குகளில் 3 பேர் கைது

  மைசூர் மாவட்டம் கே.ஆர்.நகரைச் சேர்ந்தவர் புனித்ராஜ் (23), நாகராஜ் (33), ராம்நகர் மாவட்டம் பிடதியைச் சேர்ந்தவர் சாந்தராஜ் (20). இவர்கள் 3 பேரும் குப்பளகூடு, பிடதி, ராம்நகர், சென்னபட்டனா, மத்தூர், மண்டியா உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்களை கள்ளச்சாவி  உபயோகித்து திருடி வந்தனராம்.  இது குறித்து வழக்கு பதிந்த குப்பளகூடு போலீஸார், ரூ. 18 லட்சம் மதிப்புள்ள 36 இருசக்கரவாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai