சுடச்சுட

  

  போராட்டத்தை முடித்துக்கொள்ள எடியூரப்பாவுக்கு போலீஸ் நோட்டீஸ்

  By பெங்களூரு  |   Published on : 14th November 2013 02:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடந்த 14 நாள்களாக தொடர் தர்னா போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு மாநகர காவல் ஆணையர்ராகவேந்திர அவுராத்கர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

  திருமண நிதியுதவி திட்டத்தை அனைத்து சமுதாய ஏழை பெண்களுக்கும் வழங்க வலியுறுத்தி பெங்களூரு, ஆனந்த்ராவ் சதுக்கம், காந்திசிலை எதிரே கடந்தஅக்.31-ஆம் தேதி முதல் முன்னாள் முதல்வரும், கஜக தலைவருமான எடியூரப்பா, இரவுபகலாக தொடர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார். எடியூரப்பாவின் போராட்டத்திற்கு பணிந்துள்ள மாநில அரசு, இந்ததிட்டத்தை அனைத்து சமுதாய ஏழை பெண்களுக்கு விரிவுப்படுத்துவது குறித்து பரிசீலிக்கும் என்று அறிவித்துள்ளது. இதை பொருள்படுத்தாமல் எடியூரப்பா போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்.

  இந்நிலையில், போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு எடியூரப்பாவுக்கு மாநகர காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பெங்களூருவில் எந்த அமைப்பாக இருந்தாலும் போராட்டம் நடத்த 8 நாள்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், 14-ஆவது நாளாக போராட்டம் நடத்துவது சரியல்ல. எனவே, போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு தனது நோட்டீசில் ராகவேந்திர அவுராத்கர்தெரிவித்துள்ளார்.

  இதை பொருள்படுத்தாத எடியூரப்பா, நவ.24-ஆம் தேதிவரை தனது போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார். இது குறித்துஅவர் மேலும்கூறியது: ஆனந்த்ராவ் சதுக்கத்தில் நவ.24-ஆம் தேதிவரை போராட்டம் நடத்த காவல்துறையிடம் ஏற்கெனவே அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், போராட்டத்தை முடித்துக்கொள்ள காவல்துறை மூலம் முதல்வர் சித்தராமையா மிரட்டுகிறார். இதுபோன்ற மிரட்டலுக்கு நான் அடிபணியமாட்டேன். திட்டமிட்டப்படிஎனது போராட்டத்தை தொடர்வேன் என்றார் அவர்.

  நோட்டீஸ்படி போராட்டத்தை முடித்துக்கொள்ள தவறினால், எடியூரப்பா கைதுசெய்யப்படலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai