Enable Javscript for better performance
போலீஸ் சீருடைகளை வாங்கிச் சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு- Dinamani

சுடச்சுட

    

    போலீஸ் சீருடைகளை வாங்கிச் சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு

    By பெங்களூரு,  |   Published on : 14th November 2013 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூருவில் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுகூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் காவலர் சீருடையை வாங்கிச் சென்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு அரண்மனை மைதானத்தில் வருகிற நவ.17-ஆம் தேதி பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம், பேரணி நடைபெற உள்ளது.

    அண்மையில் பாட்னாவில் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் குண்டு வெடித்ததால், பெங்களூருவில் நடைபெறும் கூட்டத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், கர்நாடக காவல் துறையினருக்கு வழக்கமாக சீருடை தைத்து கொடுக்கும் தையலரிடம் 4 நாள்களுக்கு முன்பாக மர்ம நபர் ஒருவர் காவலர்களுக்கான 10 ஜோடி சீருடையை வாங்கிச் சென்றுள்ளார்.

    அந்த நபர் வட இந்தியரைப் போல காட்சி அளித்ததாக தையலர் கூறியதால், அந்த நபரை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    வட கர்நாடகம் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தன்னிடம் தினமும் ஏராளமான காவலர்கள் சீருடை வாங்க வருவதாகவும், அதனால் தனக்கு சந்தேகம் எதுவும் வரவில்லை எனவும் காவல் துறை அதிகாரிகளிடம் தையலர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக குழப்பம் நீடிப்பதால், நரேந்திர மோடியின் கூட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அனைத்து போலீஸாருக்கும் சிறப்பு அடையாள அட்டை வழங்க மாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் முடிவு செய்துள்ளார். மர்மநபரை தேடும் பணியோடு, அடையாள அட்டைகளை தயாரிக்கும் பணியிலும் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai