சுடச்சுட

  

  முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றம் இடிப்புக்கு கண்டனம்

  By பெங்களூரு  |   Published on : 14th November 2013 02:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றம் இடிக்கப்பட்டுள்ளதற்கு கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.

  இதுகுறித்து இயக்கத்தலைவர் சி.இராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சாவூர் அருகே விளார் சாலையில் உலகத்தமிழர் பேரமைப்பு சார்பில் நிறுவப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தை தமிழக அரசு இடித்துதடைமட்டமாக்கியுள்ளதை கர்நாடக தமிழ்மக்கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழீழவிடுதலைபோராட்டத்திற்காக போராடுவோரை அடக்கி ஒடுக்கி, கைதுசெய்துள்ள தமிழக அரசு, சட்டப்பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராகவும், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாதுஎன்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது கேலிக்கூத்தானது. இதன்மூலம் தமிழக அரசின் இரட்டைவேடம்வெளிப்பட்டுள்ளது. தமிழ் உணர்வாளர்களை அடக்குவதில் அதிமுக,திமுக இடையே வேறுபாடுகாணமுடியவில்லை. தமிழக அரசின் தமிழ்விரோதப்போக்கை கடுமையாக கண்டிக்கிறோம் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai