சுடச்சுட

    

    உடல் பயிற்சியால் நீரிழிவு நோயைத் தவிர்க்கலாம்

    By பெங்களூரு  |   Published on : 15th November 2013 04:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உடல் பயிற்சியை மேற்கொண்டால் நீரிழிவு பாதிப்பை தவிர்க்கலாம் என்று நடிகை சஞ்சனா தெரிவித்தார்.

    உலக நீரிழிவு நோய் தினத்தையொட்டி, கிளாசிக் ரோட் ரன்னர்ஸ் ஆத்லெட் கிளப் சார்பில் பெங்களூரு அல்சூர் ஏரி அருகே சுகாதாரத்துக்கான ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    இதை கொடியசைத்து தொடக்கிவைத்து நடிகை சஞ்சனா பேசியது:

    அண்மைக்காலமாக இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    நீரிழிவு நோய், கண், இதயம், சிறுநீரகம் போன்ற உடல் கூறுகளை பாதிக்கிறது. இதை சரியாகப் பராமரிக்கத் தவறினால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். எனவே, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர் தினமும் நடைப்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

    அதேபோல, நீரிழிவு நோயால் பாதிக்கப்படாதவர்கள், அதன் பாதிப்பில் இருந்து விலகியிருக்க நடைப்பயிற்சி அல்லது உடல் பயிற்சியில் ஈடுபட தவறக் கூடாது என்றார் அவர்.

    ஓட்டத்தில் ரோஷன்பெய்க் எம்.எல்.ஏ., சங்கத்தின் தலைவர் ஏ.ஜே.அன்சாரி, சமூக ஆர்வலர் விஜய் குரோவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai