சுடச்சுட

  

  "கட்டுமான வேதிப்பொருள் வளர்ச்சி 23 சதமாக இருக்கும்

  By 'பெங்களூரு  |   Published on : 15th November 2013 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாட்டின் கட்டுமான வேதிப்பொருள்கள் வளர்ச்சி 23 சதமாக இருக்கும் என்று ஆர்டெக்ஸ் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் எஸ்லாம்லூ தெரிவித்தார்.

  பெங்களூருவில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் ஆர்டெக்ஸ் என்டூரா இந்தியா நிறுவனத்தின் புதிய தொழில்சாலையை திறந்துவைத்து அவர் பேசியது:

  இந்தியாவில் கட்டுமானத் தொழில் வேகமான வளர்ச்சியை கண்டு வருவதுடன் வேதிப்பொருள்களின் தேவையும் பெருகி வருகிறது.

  அடுத்த 10ஆண்டுகளில் இந்தியாவில் கட்டுமான வேதிப்பொருள்களின் வளர்ச்சி 23 சதமாக இருக்கும். அதேபோல, சந்தை மதிப்பும் ரூ.10 ஆயிரம் கோடியாக வளர்ச்சி அடையும் என்றார் மார்க் எஸ்லாம்லூ. விழாவில், நிறுவன மேலாண் இயக்குநர் கோபிநாத் கிருஷ்ணன், விஜய் அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai