சுடச்சுட

  

  பெங்களூருவில் 6 முதல் 14 வயதுக்குள்பட்ட குழந்தைகள் எழுதிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு வெளியிடப்பட்டது.

  குழந்தைகள் தினத்தையொட்டி, ஓக்ரிட்ஜ் பன்னாட்டு பள்ளியின் சார்பில், பெங்களூருவில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், பெங்களூரு, ஹைதராபாதைச் சேர்ந்த 6 முதல் 14 வயதுக்குள்பட்ட பள்ளிக் குழந்தைகள் எழுதிய 45 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு வெளியிடப்பட்டது.

  இந்திய மேலாண்மை கழகத்தின் (ஐஐஎம்) துறைத் தலைவர் ராகேஷ் கோட்வானி முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பை குழந்தைகளே வெளியிட்டனர். ஜஸ்ட் புக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடைபெற்ற சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றோரின் கதைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. விழாவில் பள்ளி முதல்வர் அர்ஜுன்ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai