சுடச்சுட

  

  பெங்களூருவிலிருந்து சபரிமலைக்கு டிச.13-ஆம் தேதி முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

  இதுகுறித்து கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  பெங்களூருவில் இருந்து சபரிமலைக்கு (பம்பா) டிச.13-ஆம் தேதியில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த சொகுசுப் பேருந்துகள் பெங்களூருவில் இருந்து மைசூர், கோழிக்கோடு, குருவாயூர், திருச்சூர், கோட்டயம், எரிமேலி வழியாக பம்பா சென்றடையும்.

  பெங்களூருவில் இருந்து தினமும் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் பேருந்து, மறுநாள் காலை 9 மணிக்கு பம்பா சென்றடையும். அந்தப் பேருந்து மறுமார்க்கமாக பம்பாவில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பகல் 12 மணிக்கு பெங்களூரு வந்தடையும்.

  சாதாரண பேருந்து சேவை டிச.20-ஆம் தேதி தொடங்கும். இந்தப் பேருந்து தினமும் பெங்களூருவில் இருந்து பிற்பகல் ஒரு மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு பம்பா சென்றடையும்.

  மறு மார்க்கத்தில் மாலை 4 மணிக்கு பம்பாவில் இருந்து புறப்படும் பேருந்து மறுநாள் முற்பகல் 11 மணிக்கு பெங்களூரு வந்தடையும்.

  இந்தப் பேருந்தில் பயணிக்க ஜ்ஜ்ஜ்.ந்ள்ழ்ற்ஸ்ரீ.ண்ய் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 080-44554422 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai