Enable Javscript for better performance
நாட்டை மேம்படுத்த நேருவின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    நாட்டை மேம்படுத்த நேருவின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும்

    By பெங்களூரு,  |   Published on : 15th November 2013 04:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாட்டை மேம்படுத்த முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் கொள்கைகளை பின்பற்றுவது அவசியம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

    பெங்களூரு காங்கிரஸ் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜவாஹர்லால் நேருவின் 124-ஆவது பிறந்த நாள் விழாவில் அவரது உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி சித்தராமையா பேசியது:

    நமது நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, நாடு கண்ட மிகச் சிறந்த தலைவர் ஆவார். நேருவின் கொள்கைகள், கோட்பாடுகள், நடத்தை, செயல்பாடுகள் நமக்கெல்லாம் முன்னுதாரணமாக விளங்குகின்றன.

    நமது நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்ற அவரது கொள்கைகளை பின்பற்றினால் மட்டுமே நமது நாட்டை மேம்படுத்த முடியும். நேருவின் குடும்பம், நமது நாட்டுக்கான உயிரையே தியாகம் செய்துள்ளது. அதே போன்றதொரு தியாக உணர்வோடு நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் பங்காற்ற வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு நேரு தொலைநோக்கு சிந்தனையோடு பாடுபட்டுள்ளார்.

    அவரது பங்களிப்பால் கல்வி, தொழில், வேளாண்மை, அறிவியல், தொழில்நுட்பம் போன்ற அனைத்துத் துறைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது.

    நவீன இந்தியாவை உருவாக்குவதில் நேருவின் பங்களிப்பு அபாரமானது என்றார் அவர். விழாவில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வர், முன்னாள் மத்திய அமைச்சர் எம்.வி.ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai