சுடச்சுட

  

  படேலின் பெயர் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது

  By பெங்களூரு,  |   Published on : 15th November 2013 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் பெயர் அண்மைக்காலமாக தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று கர்நாடக ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் தெரிவித்தார்.

  பெங்களூரு கப்பன் பூங்கா பாலர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், குழந்தைகளுக்கு வீரதீர விருதுகள் வழங்கி அவர் பேசியது:

  அண்மைக்காலமாக சர்தார் வல்லபாய் படேலின் பெயர் தவறாக பயன்படுத்தப்படுகிறது. ஜவாஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல் குறித்து சர்ச்சையை கிளப்புவது சரியல்ல. இவர்களின் பெயரை தவறாக பயன்படுத்துவது வேதனை தருகிறது. நேரு, படேல் இருவரும் நாட்டின் வளர்ச்சிக்கு தங்களுக்கே உரிய வகையில் பங்காற்றியுள்ளனர். அவர்களின் பங்களிப்பை சர்ச்சைக்குள்ளாக்குவது சரியல்ல.

  நாட்டை ஒருங்கிணைக்கும் பணியை படேல் செய்தால், நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் பணியை நேரு செய்தார். இருவரின் பெருமைகளைப் போற்ற வேண்டுமே தவிர, அதை சர்ச்சைப் பொருளாக்கக் கூடாது. இந்தியாவை வலிமையான நாடாக உயர்த்தும் பொறுப்பு குழந்தைகளின் கையில் உள்ளது. குழந்தைகளுக்கு அறிவு, ஒழுக்கம் நிறைந்த கல்வியைப் புகட்ட வேண்டும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai