பெங்களூரில் நவ.17-இல் திருக்குறள் போட்டி
By பெங்களூரு | Published on : 15th November 2013 04:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பெங்களூருவில் பள்ளி மாணவர்களுக்கு வருகிற 17-ஆம் தேதி திருக்குறள் போட்டி நடைபெறுகிறது.
இதுகுறித்து கே.எஸ்.ராமநாத ஐயர்- எஸ்.என்.நாகலட்சுமி அம்மாள் நினைவு அறக்கட்டளை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரு பென்சன் டவுன் புனித அல்போன்சஸ் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் அறக்கட்டளை சார்பில் வருகிற 17-ஆம் தேதி காலை 9 மணிக்கு திருக்குறள் போட்டி நடைபெற உள்ளது.
2-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம்.
2 முதல் 4-ஆம் வகுப்பு மாணவர்கள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் 10 குறள்களையும், 5 முதல் 7-ஆம் வகுப்பு மாணவர்கள் அன்புடைமை, விருந்தோம்பல் அதிகாரங்களில் இருந்து 20 குறள்களையும், 8 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் அன்புடைமை, விருந்தோம்பல் அதிகாரத்தில் இருந்து 20 குறள்களையும் அதன் பொருள் விளக்கத்தையும் கூற வேண்டும்.
வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.