சுடச்சுட

  

  முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பூங்கா இடிப்புக்கு கண்டனம்

  By பெங்களூரு  |   Published on : 15th November 2013 04:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பூங்கா இடிக்கப்பட்டதற்கு உலகத் தமிழர் பேரமைப்பின் பெங்களூரு கிளை கண்டனம் தெரிவித்தது.

  இதுகுறித்து பேரமைப்பின் துணைத் தலைவர் பேராசிரியர்

  சி.இராமமூர்த்தி வெளியிட்ட அறிக்கை:

  தஞ்சாவூர் அருகே திறக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் முறைப்படி விதிமுறைகளுக்கு உள்பட்டு கட்டப்பட்டதாகும்.

  வரலாற்றுச் சிறப்பு மிக்க இதை தினமும் ஏராளமானோர் கண்டு செல்கின்றனர்.

  இந்த நிலையில், நினைவு முற்றத்தின் சுவர், பூங்கா இடிக்கப்பட்ட சம்பவம் உலகத் தமிழர்களை கொதிப்படைய செய்துள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

  பெங்களூரு பென்சன் டவுன் அஞ்சல் நிலையம் அருகேயுள்ள ஐ.எஸ்.ஐ. வளாகத்தில் வருகிற 16-ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் கண்டனக் கூட்டம் நடைபெறும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai