சுடச்சுட

  

  "மோடியின் பிரசாரம் அரசியல் ரீதியாக காங்கிரஸக்கு சாதகமாகும்'

  By பெங்களூரு,  |   Published on : 15th November 2013 04:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நரேந்திர மோடியின் பிரசாரம் அரசியல் ரீதியாக காங்கிரசுக்கு சாதகமாக அமையும் என்று, முன்னாள் மத்திய அமைச்சர் ஜனார்தன பூஜாரி தெரிவித்தார்.

  இதுகுறித்து பெங்களூருவில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நாடெங்கும் பிரசாரம் செய்து வருகிறார். இதை நான் வரவேற்கிறேன். நரேந்திர மோடியின் பிரசாரம், காங்கிரசுக்கு அரசியல் ரீதியாக சாதகமாக அமையவுள்ளது. நரேந்திர மோடி பிரதமரானால், நமது நாடு, சமூகம் பிளவுப்படும். நமது நாட்டில் மதநல்லிணக்கம் தழைக்க வேண்டுமானால், மோடி பிரதமராகக் கூடாது.

  காங்கிரஸ் தலைவரான சர்தார் வல்லபாய்படேல் மீது மோடிக்கு திடீர் பாசம், பரிவு ஏற்பட்டுள்ளது. இறந்த தலைவர்களை விமர்சிப்பது இந்திய கலாசாரம் அல்ல. ஆனால், உயிரோடு இருக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்குப் பதிலாக இறந்த தலைவர்களான நேரு மற்றும் படேலுக்கு இடையே கலகம் மூட்ட மோடி முயற்சிக்கிறார். பாஜகவில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் யாரும் இல்லாததால், சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை வைப்பதாக கோடிக்கணக்கான ரூபாய் வசூலில் ஈடுபட்டுள்ளார்.

  உத்தரபிரதேசத்தில் மாயாவதி ரூ.200 கோடியில் சிலை வைத்த போது பாஜக விமர்சித்தது. ஆனால், ரூ.2,500 கோடியில் படேலுக்கு சிலை அமைக்க மோடி முயற்சித்தால் பாஜக மெüனம் காக்கிறது. சர்தார் வல்லபாய் படேல் உயிரோடு இருந்திருந்தால், சிலை வைக்க விரும்பியிருக்கமாட்டார். காந்தியைக் கொன்ற மதவாத அமைப்புகளைத் தடை செய்ததே படேல் தான் என்பது மோடிக்கு தெரிந்திருக்காது. மோடியின் விஷமப் பிரசாரம் மக்களிடம் எடுபடாது. அடுத்த மக்களவைத் தேர்தலில் மதவாதத்திற்கும், மதச் சார்பின்மைக்கும், பணக்காரர்களுக்கும் ஏழைக்கும் நடைபெறும் போட்டியில் மோடிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

  பிரதமராக நினைப்பவருக்கு நிதானமாகப் பேச தெரிந்திருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் மோடி பொய்யானத் தகவல்களை அளித்து வருகிறார். நேரு, படேல் போன்றோரின் விவகாரங்களை கிளறி மிகவும் கீழ்த் தரமான அரசியலில் மோடி ஈடுபட்டு வருகிறார். மோடி மதவாதி மட்டுமல்ல, ஊழல் வாதியும் கூட. முந்தைய பாஜக ஆட்சியில் ஊழல் தாண்டவமாடியது. எனவே, ஊழலைப் பற்றி பேச மோடிக்கு அருகதை இல்லை என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai