Enable Javscript for better performance
வேளாண் விளைபொருளுக்கு விலை ஆணையம்- Dinamani

சுடச்சுட

    

    வேளாண் விளைபொருள் விலை ஆணையம் அமைக்க கர்நாடக அரசு தீர்மானித்துள்ளது.

    பெங்களூருவில் புதன்கிழமை முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    இதுகுறித்து மாநில சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா செய்தியாளர்களிடம் கூறியது:

    விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களின் விலையை நிர்ணயம் செய்வதற்காக, வேளாண் விளைபொருள் விலை ஆணையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த ஆணையத்தில் விவசாயிகள், வேளாண்மை அறிஞர்கள், வேளாண் பொருளாதார அறிஞர்கள், உயரதிகாரிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

    அறிவியல் ரீதியாக ஆராய்ந்து ஆணையம் பரிந்துரைக்கும் விலையை அரசு அறிவிக்கும்.

    மாநிலத்திலுள்ள 216 கருவூலங்களை ரூ.36.58 கோடியில் மறுசீரமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    ரூ.1818 கோடி செலவில் 11 ஆயிரம் காவல் குடியிருப்புகளை கட்டவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

    பிபிஎல் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுவந்த வாஜ்பாய் ஆரோக்கியஸ்ரீ சுகாதாரக் காப்பீடு திட்டத்தை ஏபிஎல் குடும்ப அட்டைதாரர்களுக்கும் விரிவாக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

    நாராயணபுரா இடதுகால்வாயை சீரமைக்க கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பணி ரூ.4103.5 கோடியில் சீரமைக்கப்படும்.

    இதுதவிர, நிலத்தடி நீர் இயக்ககம் அமைக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பெங்களூரு நகர ரயில் நிலையத்துக்கு புரட்சிவீரன் சங்கொள்ளி ராயண்ணா பெயரைச் சூட்ட ரயில்வே அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அமைச்சர்கள் வாரத்தில் 3 நாள்கள் பெங்களூருவில் தங்கியிருந்து அலுவல்களை கவனிக்க கட்டாயமாக்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

    விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ள அரசு, குவிண்டாலுக்கு ரூ.1600 வழங்கவுள்ளது. பெங்களூருவில் முறையற்ற பட்டா உள்ள மனைகளைப் பதிவு செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

    இதன்மூலம் ரூ.ஆயிரம் கோடி திரட்ட அரசு தீர்மானித்துள்ளது. பெங்களூருவில் 80 சதம் சொத்துக்களுக்கு முறையான பட்டா இல்லை என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai