சுடச்சுட

  

  "750 ஒன்றியங்களில் தலா 100 ஏக்கர் நிலத்தில் அங்கக வேளாண்மை'

  By பெங்களூரு,  |   Published on : 15th November 2013 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடகத்தில் 750 ஒன்றியங்களில் தலா 100 ஏக்கர் நிலத்தில் அங்கக வேளாண்மை மேற்கொள்ளப்படும் என்று, வேளாண்மை துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கெüடா தெரிவித்தார்.

  பெங்களூரு அரண்மனை மைதானத்தில் வியாழக்கிழமை பன்னாட்டு அங்ககத் தொழில் கண்காட்சியை மத்திய வேளாண்மை மற்றும் உணவுப் பதனிடுதல் துறை இணையமைச்சர் தாரிக் அன்வர் தொடக்கிவைத்தார். அந்த விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கிருஷ்ணபைரே கெüடா பேசியது:

  கர்நாடகத்தில் அங்கக வேளாண்மை முறைக்கு தொடக்கம் முதல் ஆதரவு இருந்து வருகிறது. இயற்கையோடு இணைந்த அங்கக வேளாண்மையை மாநில அரசு தொடர்ந்து ஊக்குவித்துள்ளது. இந்தியாவில் அங்கக வேளாண்மை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அங்கக வேளாண்மையின் நிலையான வளர்ச்சிக்கு அங்கக விளைபொருள் சந்தை வாய்ப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம். அந்தப் பணியை இதுபோன்ற கண்காட்சிகள் ஏற்படுத்தும்.

  அங்கக வேளாண்மையின் வளர்ச்சிக்கு நிகழ்நிதியாண்டின் பட்ஜெட்டில் கர்நாடக அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது. மாநிலத்தின் 750 ஒன்றியங்களில் தலா 100 ஏக்கர் நிலத்தில் அங்கக வேளாண்மை மேற்கொள்ளப்படும். இந்தப் பணியைச் செய்து முடிக்க ரூ.100 கோடி பயன்படுத்தப்படும். இது தவிர, அங்கக வேளாண்மை விளைபொருள்கள் குறித்து மக்களிடையே குறிப்பாக நகரப் பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதற்காக, 7 மாநகரங்களில் அங்கக வேளாண் விளைபொருள் விற்பனைக் கண்காட்சிகள் நடத்தப்படும். அங்கக விளைபொருள் பயன்பாட்டை அதிகரித்தால், அதன் உற்பத்தியும் தானாகப் பெருகும்.

  அங்கக வேளாண்மையில் அண்மைக் காலமாக விவசாயிகள் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றனர். மரபணு மாற்ற விதைகளைப் பயன்படுத்த விவசாயிகளை அரசு தூண்டவில்லை. அங்கக வேளாண்மையை பின்பற்றுமாறு விவசாயிகளை கேட்டுக் கொள்கிறோம். ஆனால், எந்த விதையைப் பயன்படுத்துவது என்பதை விவசாயிதான் முடிவு செய்ய வேண்டும் என்றார் அவர்.

  கண்காட்சியில் 80 அரங்குகள் அமைக்கப்பட்டன. தமிழகம், கர்நாடகம், ஹிமாச்சல், சத்தீஸ்கர் மாநிலங்களின் அரங்குகள் தவிர, வெளிநாடு அரசு மற்றும் நிறுவனங்களின் அரங்குகள் இடம்பெற்றன. வருகிற 16-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில், அங்கக வேளாண்மைத் தொடர்பான கருத்தரங்கு, கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai