சுடச்சுட

  

  "ஆரோக்கியமான கர்நாடகத்தை கட்டமைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'

  By பெங்களூரு,  |   Published on : 16th November 2013 05:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆரோக்கியமான கர்நாடகத்தை கட்டமைக்க அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என்று, அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் யூ.டி. காதர் தெரிவித்தார்.

  உலக நீரிழிவு தினத்தையொட்டி, நோவா நார்டிஸ்க் இந்தியா நிறுவனத்துடன் கர்நாடக அஞ்சல் துறை வட்டம் ஆகியவை சார்பில், பெங்களூருவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீரிழிவு விழிப்புணர்வு முகாமைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:

  இந்தியாவில் நீரிழிவுநோய்த் தாக்கம் அதிகரித்து வருகிறது. நகரப் பகுதிகளைக் காட்டிலும், கிராமப்புறங்களில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதற்கு மாறிவரும் வாழ்க்கை முறைகளும் ஒரு காரணமாகும். பொதுமக்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் மாநிலம் வளமாகும். எனவே, கர்நாடகத்தை ஆரோக்கியமான மாநிலமாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

  பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் ஆரோக்கியமான மாநிலத்தை உருவாக்க இயலாது.

  நீரிழிவு நோய் மற்றும் அதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்வது அவசியம் என்றார் அவர்.

  முகாமில் நோவா நார்டிஸ்க் இந்தியா நிறுவன மேலாண் இயக்குநர் மெல்வின் டிசெüஜா, கர்நாடக வட்ட அஞ்சல் துறை தலைமை அதிகாரி அருந்ததி கோஷ், இந்திய மருத்துவர் சங்கத் தலைவர் ஏ.முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  முன்னதாக, நீரிழிவு நோய்த் தடுப்பு, நோய் அறிகுறியைக் கண்டறிதல், பாதுகாப்பு ஆகியவை தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சிறப்பு அஞ்சல் உறை மற்றும் அஞ்சல் தலையை அமைச்சர் யூ.டி.காதர் அறிமுகம் செய்து வைத்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai