சுடச்சுட

    

    "இந்தியாவில் கணினி விற்பனை ஊக்கம் அளிக்கிறது

    By 'பெங்களூரு,  |   Published on : 16th November 2013 05:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

      இந்தியாவில் கணினி விற்பனை ஊக்கம் அளிக்கிறது என்று, லெனோவா இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் அமர்பாபு தெரிவித்தார்.

    பெங்களூருவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் லெனோவா இந்தியா நிறுவனத்தின் புதிய வகை யோகா டேப்லெட்டை (கைக் கணினி) அறிமுகப்படுத்தி அவர் பேசியது:

    உலக அளவில் கணினித் தொழில்நுட்பம் வேகமாக பரவிவந்தாலும், இந்தியாவில் நடந்து வரும் தொழில்நுட்ப புரட்சி பாராட்டும்படி உள்ளது. இந்தியாவில் கணினி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், அதன் விற்பனையும் ஊக்கமளிப்பதாக உள்ளது. இந்திய கணினிச் சந்தையில் 18 சத பங்குடன் 2-ஆவது பெரிய நிறுவனமாக லெனோவா விளங்குகிறது.

    கணினியைத் தவிர, டேப்லெட், ஸ்மார்ட்போன் ஆகிய பொருள்களையும் விற்பனை செய்து வருகிறோம். இந்திய வாடிக்கையாளர்களைக் கவனத்தில் கொண்டு, யோகா டேப்லெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த டேப்லெட்டை பல கோணங்களில் பயன்படுத்தலாம்.

    திரைப்படம் பார்க்க, தட்டச்சு செய்ய, மின்-நூல்களை வாசிக்க இந்த டேப்லெட் உதவியாக இருக்கும் என்றார் அவர். விழாவில் அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் ஷைலேந்திரகட்யால், பாஸ்கர் செüத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai