சுடச்சுட

  

  கர்நாடக முன்னாள் முதல்வரும், கஜக தலைவருமான எடியூரப்பா மீண்டும் பாஜகவில் இணைவது உறுதி என்று, கர்நாடக பாஜக தலைவர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.

  இதுகுறித்து பெங்களூருவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

  எடியூரப்பா மீண்டும் பாஜகவில் இணைவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக பாஜக மேலிடம் விரைவில் முடிவெடுக்கும்.

  பெங்களூருவில் வருகிற 17-ஆம் தேதி நடைபெறும் பேரணி, பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்.

  வட கர்நாடகத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது, நிவாரணப் பணிகளுக்காக பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட பணத்தை தங்களது சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திய காங்கிரஸ் தலைவர்கள், மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள கட்டணம் வசூலிப்பது குறித்து கிண்டல் செய்யத் தகுதியற்றவர்கள்.

  மோடி குறித்து விமர்சனம் செய்வதை கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் குமாரசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும். மஜதவிடம் பாஜக எப்போதும் ஆதரவு கேட்டதில்லை, இனியும் கேட்கப் போவதில்லை.

  காங்கிரஸ் ஆதரவுடன் தேவ கெüடாவை பிரதமராக்கலாம் என்ற கனவுடன் பாஜகவை  குமாரசாமி விமர்சித்து வருகிறார்.

  பள்ளி மாணவர்களுக்கான சுற்றுலாத் திட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு மட்டும் வாய்ப்பளித்தது கண்டிக்கத்தக்கது. மாணவர்களிடையே ஜாதி பாகுபாடு கூடாது. இந்தத் திட்டத்தை அரசு திரும்பப் பெறாவிடில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai