Enable Javscript for better performance
ஏழைகளின் ஆரோக்கியத்தில் அனைவரும் அக்கறை செலுத்த வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    ஏழைகளின் ஆரோக்கியத்தில் அனைவரும் அக்கறை செலுத்த வேண்டும்

    By பெங்களூரு,  |   Published on : 16th November 2013 05:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏழைகளின் ஆரோக்கியத்தில் அனைவரும் அக்கறை செலுத்த வேண்டும் என்று, கர்நாடக ஆளுநர்

    எச்.ஆர்.பரத்வாஜ்  வலியுறுத்தினார்.

    அமெரிக்காவின் ஸ்டாட்கீ ஹியரிங் ஃபவுண்டேஷன், கர்நாடக தொழில் வர்த்தகசபைக்  கூட்டமைப்பு, பெங்களூரு மாநகராட்சி, எரின் ஃபவுண்டேஷன், இந்திய செஞ்சிலுவை சங்கம் கர்நாடக கிளை ஆகியவை சார்பில், பெங்களூருவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் காது கேளாத குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவியை வழங்கி அவர் மேலும் பேசியது:

    காது கேளாமையால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைக் குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவி வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏழைகளின் உடல் நலனில் சமூகம் அக்கறை செலுத்த வேண்டும்.  ஏழைகள் ஆரோக்கியமாக இருக்க அனைவரும் நிதியுதவி செய்ய வேண்டும். சமூக, பொருளாதார ரீதியாக நலிவுற்றோர், பின்தங்கியோர், ஒடுக்கப்பட்டோர், ஏழைகள் ஆகியோரின் ஆரோக்கிய வாழ்விற்கு அரசுடன் சேர்ந்து பொதுமக்களும் சேவை செய்ய வேண்டும் என்றார் பரத்வாஜ்.

    விழாவில் கர்நாடக சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கமருல் இஸ்லாம், செஞ்சிலுவை சங்கத் தலைவர் பஸ்ரூர்ராஜீவ் ஷெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai